• February
    26
    Wednesday

Main Area

Main



மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறிய ரஜினியின் முடிவை பாராட்டுகிறேன் - குஷ்பு

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி  நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, 'பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது' என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது.  இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெரியார் குறித்து பத்திரிக்கையில் படித்ததைதான் தெரிவித்திருந்தேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 

ரஜினிகாந்த் குஷ்பு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “ ரஜினி கூறிய கருத்து ஏற்புடையதாக இல்லை என்றால், அதற்கு மறுப்பு சொல்வது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை. ஆனால் ஒரு முடிவை எடுத்த ரஜினி அதில் உறுதியாக இருக்கிறார் என்பதை நான் பாராட்டுகிறேன். ரஜினியின் கருத்து சரியானது அல்லது தவறானது என நான் சொல்லமுடியாது. ஆனால் பயமின்றி பேசவேண்டும் என்பது முக்கியம். அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ” என தெரிவித்திருந்தார். 

 

 

இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர்,  “குஷ்பு மேடம் ரஜினியிடம் நீங்கள் நடித்ததால்  அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். அசிங்கமாக உள்ளது. உங்களை பற்றி, உங்கள் கலாச்சாரம் பற்றி பலர் தவறாக எழுதி இருக்கிறார்கள். ரஜினி உங்களை பற்றியும் ஒரு சிறிய பேப்பரை வைத்துக் கொண்டு தவறாக பேசுவார், அப்போது நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று பார்க்கலாம்” என கேட்டார்.

 

அதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “நான் சொன்னதை நன்றாகப் படியுங்கள் .. சரி அல்லது தவறு. இது உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று கூறியிருக்கிறேன். நான் ரஜினியுடன்  28 வருடங்களுக்கு முன்னரே நடித்துவிட்டேன். அதனால் எனக்கு அது புதியது அல்ல” எனக்கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.