தேர்தல் முடிஞ்சிட்டு… போய் வேலைய பாருங்க- குஷ்பு

 

தேர்தல் முடிஞ்சிட்டு… போய் வேலைய பாருங்க- குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் நடிகை குஷ்பு. திமுக, காங்கிரஸ் என கட்சிகளுக்கு சென்றுவந்தாலும், பாஜகவில் சேர்ந்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தேர்தல் முடிஞ்சிட்டு… போய் வேலைய பாருங்க- குஷ்பு

கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்புக்கு முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கிடைத்ததால் தீவிர பரப்புரையை அவர் மேற்கொண்டார். இருப்பினும் திமுகவுடன் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டுவந்த குஷ்பு, திமுகவினருக்கு பெண்களை மதிக்க தெரியாது என தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டரில், “தேர்தல் முடிந்து விட்டன.. ஆனால் தோல்வி பயத்தால் திமுகவினர் சிலர் பிரமை பிடித்தவர்கள் போல இருக்கின்றனர். இன்னமும் சத்தம் போட்டு கொண்டிருப்பதை பார்த்துக்கிட்டு இருக்கேன். போய் வேலை இருந்தா பாருங்க.. ஒரு பெண்ணை மதிக்காத கட்சியின் பேச்சு எப்படி இருக்கும்? அது தமிழ் மக்களுக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.