பாஜகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு

 

பாஜகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், குஷ்பு இணைகிறார். முதலில் திமுகவில் இருந்த குஷ்பு, கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இணையவுள்ளார்.

பாஜகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு

டெல்லி செல்வதற்காக் சென்னை விமான நிலையம் வந்த குஷ்புவிடம் பாஜகவில் இணைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு No comments என்று பதிலளித்தார் குஷ்பு.. தொடர்ந்து காங்கிரசில் இருக்கிறீர்களா? என செய்தியாளர்கள் அடுத்த கேள்வி எழுப்ப, அதற்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

முன்னதாக ஒரு ட்வீட்டுக்கு ரூ. 2 வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பு கூறியிருந்தார்.