குஷ்பு எந்த கட்சியில் இணைகிறாரோ அந்த கட்சி ஆட்சியை இழக்கும்! வைரலாகும் நெட்டிசன்களின் கணக்கு

 

குஷ்பு எந்த கட்சியில் இணைகிறாரோ அந்த கட்சி ஆட்சியை இழக்கும்! வைரலாகும் நெட்டிசன்களின் கணக்கு

நடிகை குஷ்பு இணையும் கட்சிகள் ஆட்சியை நிச்சயம் இழக்கும் என்றும் இதற்கு திமுகவும், காங்கிரஸுமே சிறந்த உதாரணங்கள் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் தனித்த இடம் பிடித்தவர் குஷ்பு. திரையுலக வாழ்க்கைக்கு பின்னர் அரசியல் களத்திற்குள் நுழைந்தார் குஷ்பு. திமுகவில் சேர்ந்து தேர்தலின்போது பிரசாரத்துக்கு அனுப்பப்பட்டார். வழக்கமாக தேர்தலில்போது பயன்படுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களைப் போல அல்லாமல், திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ளவராகவே நடத்தப்பட்டார். திமுகவின் அடுத்த தலைவர் பற்றிய அவரின் கருத்து கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவரது கட்சி மாற்றம் குறித்து ஒரு மீம்ஸ் ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

குஷ்பு எந்த கட்சியில் இணைகிறாரோ அந்த கட்சி ஆட்சியை இழக்கும்! வைரலாகும் நெட்டிசன்களின் கணக்கு

அதில், ”2009 இல் குஷ்பூ திமுகவில் இணைந்தார் -2011 இல் திமுக ஆட்சியை இழந்தது. 2013 இல் காங்கிரஸில் இணைந்தார் -2014 இல் அக்கட்சி ஆட்சியை இழந்தது. 2020 இல் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார் – ஸ்வீட் எடு கொண்டாடு” எனக் குறிப்பிட்டுள்ளனர்.