“வெளிநாட்டுகாரண்ணா வாய பொளந்துக்கிட்டு வந்துடுவிங்களே..” -17 லட்சம் ஏமாந்த பெண்ணின் கதை

 

“வெளிநாட்டுகாரண்ணா வாய பொளந்துக்கிட்டு வந்துடுவிங்களே..” -17 லட்சம் ஏமாந்த பெண்ணின் கதை


சமூக ஊடகத்தில் நண்பராக பழகி ஒரு பெண்னிடம் நூதன முறையில் 17 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .

“வெளிநாட்டுகாரண்ணா வாய பொளந்துக்கிட்டு வந்துடுவிங்களே..” -17 லட்சம் ஏமாந்த பெண்ணின் கதை


மும்பையில் குர்லா பகுதியில் வசிக்கும் 34 வயதான பெண் விவகாரத்து பெற்றவர் ஆவார் .அவர் சமீபத்தில் சமூக ஊடகத்தில் ஒருவரை சந்தித்தார் .அந்த நபர் தன் பெயர் ஆண்ட்ரியா ஒலிவேரா என்றும் ,தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் ,தற்போது ரஷ்யாவில் ஒரு பைலட்டாக வேலை பார்ப்பதாகவும் கூறினார் .அவர் கூறியதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரோடு தொடர்ந்து ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்தார் .
அதன் பிறகு ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நபர் அந்த பெண்ணுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினார் .அதில் அவர் தான் ரஷ்யாவிலிருந்து 65 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சியோடு ஒரு பார்சேல் அனுப்பியுள்ளதாகவும் அதை பெற்று கொள்ளுமாறும் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார் .அதன் பிறகு அந்த பார்சலை எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு அங்கிதா சர்மா என்ற பெண் போனில் பேசினார் .அப்போது பேசிய அந்த பெண் தங்களுக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு பார்சல் வாதிருப்பாதகவும் அதை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சர்வீஸ் டாக்ஸ் ,மற்றும் எக்ஸைஸ் வரி,டூட்டி கட்டவேண்டுமென்று கூறி அந்த பெண்ணிடம் பல தவணைகளாக 17 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டார் .அதன் பிறகு அந்த பெண் மேலும் பணம் கேட்டபோது அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அந்த பெண்ணிடம் மோசடி செய்ததை போல பல பெண்களிடம் பண மோசடி செய்ய, இதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட 26 வயதான நைஜீரிய நாட்டு பெண் ஜசிந்தா ஒகோனோவோ ஓஃபானாவை கைது செய்தார்கள் .

“வெளிநாட்டுகாரண்ணா வாய பொளந்துக்கிட்டு வந்துடுவிங்களே..” -17 லட்சம் ஏமாந்த பெண்ணின் கதை