குண்டாஸ், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிரடி… உறுதியான தலைவர் என்று வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு

 

குண்டாஸ், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிரடி… உறுதியான தலைவர் என்று வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்று தப்பு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் உறுதியான தலைவர் என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார்.

குண்டாஸ், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிரடி… உறுதியான தலைவர் என்று வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் கந்த சஷ்டி கவத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டது. ஆறு மாதம் கழித்து அது பற்றி பா.ஜ.க-வினர் பிரச்னை கிளப்பிய நிலையில் யூடியூப் சேனல் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். யூடியூப் சேனல் முடக்கப்பட்டு, வீடியோக்கள் அகற்றப்பட்டன. மேலும் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டாஸ், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிரடி… உறுதியான தலைவர் என்று வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு
அதே நேரத்தில் கோயபுத்தூரில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய இளைஞர் அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இரு தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்ததன் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு உறுதியான தலைவர் என்பதை உறுதி செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் இனி தவறு செய்ய நினைப்பவர்களுக்கும் கூட கடுமையான எச்சரிக்கையை எடப்பாடி பழனிசாமியின் வெளிப்படுத்தியுள்ளது என்று நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சரின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அ.தி.மு.க எதிர்ப்பாளர்களும் கூட பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக கருத்துகளை வெளியிடும், அ.தி.மு.க எதிர்பாளர்களுள் ஒருவரான சவுக்கு சங்கர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில்

 

குண்டாஸ், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிரடி… உறுதியான தலைவர் என்று வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் பாராட்டு மதவாத சக்திகள் வளர்ந்தன, வேரூன்றின என்ற அவப்பெயர் காலத்துக்கும் அழியாது. இந்த தேசிய பாதுகாப்பு சட்ட அடைப்பு உத்தரவின் மூலம், ஒரு உறுதியான செய்தியை சங்கிகளுக்கு முதல்வர் தெரிவித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். வாழ்த்துக்கள் முதல்வரே” என்று கூறியுள்ளார். இதுவே முதல்வரின் நடுநிலையான, உறுதியான நடவடிக்கைக்கு சான்று!