அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது குண்டாஸ்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது குண்டாஸ்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது குண்டாஸ்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள அண்ணா சிலையை மர்ம நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர். அண்ணா கழுத்தில் காய்ந்த மாலை, பழைய சீரியல் லைட் மாட்டியும், கைப்பிடியில் காவிக் கொடியை பறக்கவிட்டும் அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது போல உள்ளது.

அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது குண்டாஸ்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது

http://

காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிற கொடிகளை போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலை செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.