தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி

 

தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த விஜயபாண்டி மகன் செல்லத்துரை (19), முருகன் மகன் முத்துக்குமார் (24) ஆகியோர் அப்பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால்,செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் பரிந்துரை செய்துள்ளார்.

தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி


அதேபோல, ஸ்ரீவைகுண்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன்(43), பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்து வந்ததால், கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 6 வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கோவில்பட்டி, மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த காந்தாரி முத்து என்பவர் மகன் கனகராஜ் (29) என்பவரும் அப்பகுதியில் சமூக விரோத செயல்களை செய்து வந்துள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன் பரிந்துரை செய்துள்ளார்.

தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி


இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், குற்றவாளிகள் 4பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குற்றவாளிகள் 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.