தேனி: குமுளி செல்லும் மலைச்சாலை தற்காலிகமாக மூடல்!

 

தேனி: குமுளி செல்லும் மலைச்சாலை தற்காலிகமாக மூடல்!

குமுளி செல்லும் மலைச்சாலை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேனி: குமுளி செல்லும் மலைச்சாலை தற்காலிகமாக மூடல்!

தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம்,லோயர் கேம்ப் வழியாக குமுளி வரை இருந்த மாநில சாலை, தற்போது தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகளான புதிய பாலங்கள், தடுப்பு சுவர்கள் கட்டுதல் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நடைபெற்று வருகிறது.

தேனி: குமுளி செல்லும் மலைச்சாலை தற்காலிகமாக மூடல்!

இந்நிலையில் தேனி மாவட்டம் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள லோயர் கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைச் சாலையில் சிறு பாலங்கள் தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெறு உள்ளதால், வருகின்ற டிசம்பர் 24 முதல் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்படடுள்ளது. இதற்கு மாற்று வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சாலை வழியாக செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்