கும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்!

 

கும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்!

கும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியைக் குத்தி கொலை செய்த பா.ஜ.க நகரத் தலைவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நாச்சியார்கோவில் நகர பா.ஜ.க தலைவராக இருந்தார். இவர் கர்நாடகாவில் உள்ள மடம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்த மடத்துக்கு சொந்தமான சொத்துக்களை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கோபாலன் என்பவர் நிர்வகித்து வந்தார்.

கும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்!
மடத்தின் சொத்து என்பதால் அதை அபகரிக்க சரவணன் முயன்றார். இதனால் சரவணனுக்கும் கோபாலனுக்கும் தகராறு ஏற்பட்டது. பணம் தருகிறேன், கடையை காலி செய்துவிடும்படி கோபாலன் கேட்டிருக்கிறார். அப்பா காலத்தில் இருந்து இந்த கடையை நடத்தி வருகிறோம். சட்டப்படி இந்த இடம் எனக்குத்தான் சொந்தம் என்று சட்டம் பேசியுள்ளார் சரவணன். இதனால் கடையை காலி செய்ய நீதிமன்றம் சென்றார் கோபாலன். இதுதொடர்பான வழக்கில் கோபாலனுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது.

கும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்!
இந்த நிலையில் கடையை காலி செய்வதாக இருந்தால் பணம் தருகின்றேன் என்றீர்களே, அதைத் தாருங்கள் என்று கேட்டுள்ளார் சரவணன். அது நீதிமன்றம் செல்வதற்கு முன்பு காலை செய்திருந்தால் கொடுத்திருப்பேன். இனி எதற்கு தர வேண்டும் என்று கோபாலன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கடந்த ஜூலை மாதம் கோபாலனைக் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
உடனடியாக நாச்சியார்கோவில் போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோபாலன் கொல்லப்பட்டது அந்த பகுதியில் மதப் பிரச்னையாக பார்க்கப்பட்டது. இரு தரப்பினர் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்!

இந்த நிலையில் சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவு பிறப்பித்தார்.