கும்பகோணம் தொழிலதிபரின் சபல புத்தி -குரல் மாற்றி செயலி மூலம் ஏமாற்றி பணம் கறந்த தூத்துக்குடி இளம்பெண்

 

கும்பகோணம் தொழிலதிபரின் சபல புத்தி -குரல் மாற்றி செயலி மூலம்  ஏமாற்றி பணம் கறந்த தூத்துக்குடி இளம்பெண்

காதலி என்ற போர்வையிலும், போலீஸ் டிஎஸ்பி என்ற போர்வையிலும் தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்து வந்து கணவனும் மனைவியும் சிக்கினர்.

கும்பகோணம் தொழிலதிபரின் சபல புத்தி -குரல் மாற்றி செயலி மூலம்  ஏமாற்றி பணம் கறந்த தூத்துக்குடி இளம்பெண்

கும்பகோணம் அடுத்த கண்டியூரைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகநூலில் உள்ள இவருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ஜனனி ஜாஸ்மின்(23) என்கிற இளம்பெண் அறிமுகமாகியிருக்கிறார்.

பேஸ்புக் மூலம் தொடர்ந்து பேசி வந்தவர்கள் நேரிலும் சந்தித்து பேசி வரும் அளவிற்கு நெருக்கமாகி விட்டனர். தனக்கு திருமணமாகி பார்த்திபன் என்கிற கனவர் இருப்பதை மறைத்து விட்டு திருமணம் ஆகவில்லை என்று சரவணனுடன் பழகி வந்துள்ளார் ஜனனி. அவருடன் பல இடங்களில் சுற்றி வந்தபோது அவர் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் வரைக்கும் சரவணனிடம் இருந்து கறந்திருக்கிறார் ஜனனி. சரவணனிடம் இவ்வாறு 7 லட்சம் ரூபாய் பணம் பறித்த விஷயத்தை கணவர் பார்த்திபனிடம் பகிர்ந்து கொள்ள அவரும் ஜனனிக்கு உடந்தையாக இருந்து சரவணன் இடமிருந்து மேலும் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

கும்பகோணம் தொழிலதிபரின் சபல புத்தி -குரல் மாற்றி செயலி மூலம்  ஏமாற்றி பணம் கறந்த தூத்துக்குடி இளம்பெண்

சரவணனின் சபல புத்தியை படுத்துக்கொண்டு ரம்யா என்ற பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முகநூலில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். குரல் மாற்றி செயல் மூலமாக ரம்யா பேசுவதுபோல் ஜனனியே சரவணனிடம் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதியன்று சரவணனுக்கு ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. எடுத்துப் பேசி அவருக்கு ஒரே அதிர்ச்சி. தூத்துக்குடி போலீஸ் டிஎஸ்பி என அறிமுகம் செய்துகொண்டு, உங்களுடன் முகநூலில் பழகிய ரம்யா தற்கொலை செய்துவிட்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருக்கும் கடிதத்தில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார் என்று குரல் மாற்றி செயலி மூலம் பேசியிருக்கிறார்.

கும்பகோணம் தொழிலதிபரின் சபல புத்தி -குரல் மாற்றி செயலி மூலம்  ஏமாற்றி பணம் கறந்த தூத்துக்குடி இளம்பெண்

இதில் அதிர்ந்து போய் சரவணன் உறைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் உங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் பத்து லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக சரவணனும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். இதை அடுத்து தனது கணவர் பார்த்திபனை, இன்ஸ்பெக்டர் என்று சொல்லி அவரை கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தூத்துக்குடி டிஎஸ்பி போல் பேசி ஜனனி நாடகமாடியது தெரியாத சரவணன், பார்த்திபனிடம் தன்னிடம் கையிலிருந்த 68 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கும்பகோணம் லாட்ஜில் தங்க வைத்துவிட்டு, மீத பணத்தை புரட்டிக் கொண்டிருந்திருக்கிறார். இது பற்றிய விவரம் தெரிந்த நண்பர்கள் போலீசார் இப்படி நேரடியாக வந்து அதுவும் ஒரு லாட்ஜில் தங்கி பணம் வாங்கமாட்டார்கள் என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். இதை அடுத்து பார்த்திபனை துருவித் துருவி விசாரித்ததில் அவர் உண்மையை உளறி இருக்கிறார். இதையடுத்து போலீசில் தகவல் தெரிவித்து ஜனனி வரவழைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.