“கஞ்சா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை”- குமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

 

“கஞ்சா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை”- குமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டத்தின் எஸ்.பி.ஆக பதவி ஏற்றது முதல், போதை பொருட்கள் விற்பவர்கள் மீது, தனி கவனம் செலுத்தி, அதனை தடுக்க போலீசாரிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். இதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் தனிப்படைகள் அமைத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“கஞ்சா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை”- குமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

மேலும், தான் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 215 பேர் மீது, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 447 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். குறிப்பாக, கடந்த 20 நாட்களில் மட்டும் கஞ்சா வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு, 212 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

மேலும், கன்னியாகுமரியை, போதை பொருட்கள் நடமாட்டமில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.