குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கோயில் முன்பே நடத்தப்படுகிறது.

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாதது இதுவே முதல்முறை.

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

குலசேகரப்பட்டினத்தில் புகழ்பெற்ற தசரா திருவிழா கடந்த அக்.17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காளி, அம்மன் உள்பட பல்வேறு வேடங்களை தரித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

குலசை சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதியில்லை!

இருப்பினும் கொரோனா காரணமாக இன்று நடக்கும் சூரசம்ஹாரம், கொடி இறக்கம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே தெரிவித்தார். இங்கு தினந்தோறும் 8ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.