அவசர பட்டுட்டியே குமாரு.. புலம்பித் தவிக்கும் கு.க.செல்வம்!

 

அவசர பட்டுட்டியே குமாரு.. புலம்பித் தவிக்கும் கு.க.செல்வம்!

தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்ட பாஜக தலைமை, பல கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்டது. அதாவது கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்கள், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து தன் பக்கம் இழுத்துக் கொண்டது. அப்படி திமுகவில் இருந்து பாஜக பக்கம் தாவியவர் தான் கு.க.செல்வம். அவருக்கு முன் பாஜகவில் இணைந்து வி.பி.துரைசாமியால், கு.க.செல்வமும் பாஜகவில் ஒட்டிக் கொண்டார் என அப்போதே தகவல்கள் கசிந்தன.

அவசர பட்டுட்டியே குமாரு.. புலம்பித் தவிக்கும் கு.க.செல்வம்!

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தார் கு.க.செல்வம். வரும் தேர்தலில் அந்த தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்படவிருப்பதாக முன்னரே தகவல்கள் கசிந்தது. இதனால் தான் கு.க.செல்வம் கட்சியில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. திமுகவில் இருந்து விலகிய பிறகு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார். அதற்கும் ஆப்பு வைத்து விட்டது பாஜக.

அவசர பட்டுட்டியே குமாரு.. புலம்பித் தவிக்கும் கு.க.செல்வம்!

கு.க.செல்வம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆயிரம் விளக்கு தொகுதியை நடிகை குஷ்புவுக்கு கொடுத்து விட்டது. அந்த பக்கம் திமுக, ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதியை போட்டியிட வைக்கவில்லை. அவருக்கு சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியைத் தான் ஒதுக்கியிருக்கிறது.

கட்சியில் இருந்து வெளியேறாமல் பொறுமையாக காத்திருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று எண்ணி கு.க.செல்வம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். பாஜகவில் வேறு ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டாலும், எம்.எல்.ஏ பதவியை போல வருமா? என்று தன்னுடன் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்..!