பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

 

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

கோடநாடு கொலை வழக்கில் அடிபடும் எடப்பாடியின் பெயர், புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் உருளும் ஓபிஎஸ் தலை என தமிழக அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது கே.டி.ராகவன் லீக்ஸ். தமிழக பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் அக்கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் ரூம் போட்டு கூத்தடிப்பதாக எல்.முருகன் தலைவராக இருந்தபோதே குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டு பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற நாளிதழான மலர் என்று முடியும் பத்திரிகையில் வெளியானது தான் ஹைலைட்டான விஷயம்.

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

தமிழக பாஜகவில் பிராமணர் vs பிராமணர் அல்லாதோர் என்ற பனிப்போர் நீண்ட நாட்களாகவே நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பாலியல் கூத்துகள் செய்தி வெளியானது. இதனைக் காரணம் காட்டி பிராமணர் அல்லாதோரை ஓரங்கட்ட பிராமணர் கோஷ்டி திட்டம் தீட்டின. பாஜகவின் மிக முக்கிய பிரமுகரான எஸ்.வி.சேகர் வெளிப்படையாகவே இதுதொடர்பாகப் பேசியிருந்தார். இந்தப் புகார்கள் புகார்களோடு நிற்காமல் டெல்லி மேலிடம் வரை சென்றுள்ளது. இந்தப் பின்னணியில் தான் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கொடுத்ததைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தலைமையின் கீழ் தாங்கள் செயல்படுவதா என்ற வெறுப்பில் பாலியல் கூத்துகள் வெளியே பகீரங்கப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி தலைவர் பதவியிலிருந்து அவர் அகற்றப்பட்டார். ஆனால் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை தூக்கினால் வாக்கு வங்கியில் அடிபடும் சூழல் வேறு இருப்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து சரிக்கட்டப்பட்டது. ஆனால் தமிழகத்தில் பிராமணர் ஒருவரை தலைவராக போட முடியாத சூழல் பாஜகவுக்கு இருக்கிறது. மத ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்த முடியாது என சாதியைக் கையிலெடுத்துள்ளது.

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

பாஜகவிற்கு மேற்கு மண்டலமான கோவையில் வலுவான அடித்தளம் இருப்பதால் அந்த மண்டலத்தைச் சேர்ந்தவரான அண்ணாமலையைத் தலைவர் பொறுப்பில் அமர்த்தினர். இவர் இளைஞர். இடைநிலை சாதியைச் சேர்ந்தவர். கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய அங்கீகாரம். இவற்றைக் கொண்டு ஏராளமான இடைநிலை சாதி இளைஞர்கள் பாஜகவிற்குச் சென்றால் அரசியல் எதிர்காலம் என்று நினைத்து கட்சியில் இணைவார்கள். ஒரே கல்லில் இரண்டு இல்லை மூன்று மாங்காய் அடித்திருக்கிறது பாஜக. தமிழக பாஜகவின் பிராமணர் பிரிவு ஒரு கணக்கு போட்டால் டெல்லி மேலிடம் இப்படி ஒரு கணக்கு போட்டது.

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

பிராமணர் vs பிராமணர் அல்லாதோர் என்ற கோணத்திலேயே கே.டி.ராகவனின் லீக்ஸை பார்க்க வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால் பழிவாங்கியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தமிழக பாஜகவில் மிக முக்கியப் பொறுப்பான மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர் கே.டி.ராகவன். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். எந்த பிராமணர்கள் தங்கள் மீது பாலியல் குற்றம் சாட்டினார்களோ, அதே பிராமணர்களில் ஒருவரை ஆதாரத்துடன் தோலுரித்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் அண்ணாமலையின் தலையீடு இல்லாமல் இல்லை என்றே தெரிகிறது.

வீடியோவை வெளியிட்டுள்ள பத்திரிகையாளரான மதன் ரவிச்சந்திரன், அதில் அண்ணாமலைக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் ஆரம்பமாகிறது அந்தச் சந்தேகம். ஆரம்பத்தில் கே.டி.ராகவனின் காம களியாட்ட வீடியோவை அண்ணாமலையிடம் தான் காட்டியதாகவும், அதை டெல்லி மேலிடத்துக்குச் சென்று காட்டினால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது என அண்ணாமலை சொல்லியதாகவும் மதன் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை ரிலீஸ் செய்யுங்கள் என அண்ணாமலை கூறியதாக அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசெஜையும் ஆதாரமாக வீடியோவில் காண்பித்துள்ளார் மதன்.

பூஜை ரூமில் கேடி ராகவனின் பாலியல் பஜனை… பின்னணியில் அண்ணாமலை? – பிராமண லாபிக்கு வைத்த செக்கா?

இதில் அண்ணாமலையின் நேர்மையைப் பாரீர் என்ற தொனியில் மதன் பேசியிருப்பது தான் வலுத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கே.டி.ராகவனை தோலுரிப்பதன் மூலம் தமிழக பாஜகவில் பிராமணர் ஆதிக்கத்தைக் குறைத்துவிடலாம் என அண்ணாமலை வைத்த செக்கா என்றும் சந்தேகப்பட வைத்துள்ளது. ஆனால் தான் லீக் செய்ய சொல்லவில்லை என அண்ணாமலை மறுத்திருக்கிறார். அதேபோல சில நாட்களுக்கு முன் சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரிப்பதாகவும் ராகவன் மீது நடிகர் சண்முகராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். பாபாவின் தீவிர பக்தரான சண்முகராஜா, ஆசிரமத்திலும் பள்ளியிலும் பிராமணர் அல்லாத மாணவர்களை ராகவனும் பாபாவின் நிர்வாகியாக இருக்கும் ஜானகியும் விரட்டி அடிப்பதாகவும், ஊழல் செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார். தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து தற்போது கட்சிப் பொறுப்பை ராகவன் ராஜினாமா செய்திருக்கிறார்.