“திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது”

 

“திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது”

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், “பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சிஸ்டம் இருக்கிறது. அதன்படி, எந்த முடிவையும் எங்களது அகில இந்திய தலைமைதான் அறிவிக்க வேண்டும். அதைத்தான் எங்களுடைய தலைவர் முருகன் சொல்லி இருக்கிறார். அதிமுகவோடு கூட்டணி தொடரும் என்று சொல்லும் உரிமை இருப்பவர் தான் சொன்னார். எங்களது கட்சியை பொறுத்தவரையில் எந்த முடிவையும் அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். அதனால் தான் தமிழகத்திற்கு வரும்போது மத்திய அமைச்சர் அமித்ஷா கூட எதையும் சொல்லவில்லை. எங்களுடைய கட்சியின் கட்டமைப்பு அப்படித்தான் சின்ன முடிவை கூட தலைமை தான் அறிவிக்கும். எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று எங்கள் தலைவர் முருகன் நேற்றே தெரிவித்துவிட்டார்

Tamil Nadu BJP General Secretary KT Raghavan tested positive for Covid-19 -  Simplicity

கூட்டணி என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். எல்லோரும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம். தலைமை ஒருவர் என்பதால், அவருக்கு கீழ் தான் மற்றவர் எல்லாம் என்பதெல்லாம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழின விரோத கட்சி, தமிழர்கள் எல்லாம் எங்களுக்கான ஒரு இயக்கம் கட்சி இருக்கிறது என நினைக்கின்ற போது, தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. அதை விவசாயிகள் விஷயத்தில் கூட சொல்லலாம். கடந்த 2016ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள். விவசாயிகள் விளை பொருட்களை, எல்லைகள் இல்லாமல், மாநிலம் தாண்டி விற்பதற்கு சட்டத்தை மாற்றி அமைப்போம் என சொன்னது, அதையே காங்கிரஸ் கட்சியும் தெரிவித்தது. ஆனால் இந்த சட்டங்களை விவசாயிகளுக்கு நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். இதனால்தான் அவர்களால் இச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு எதுவும் கிடைக்க கூடாது என்பதற்காக திமுக அதை விமர்சனம் செய்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதை எதிர்க்கட்சிகள் தடுக்க முயற்சி செய்கிறார்கள். இப்படி மக்களுக்கு ஒன்றும் செய்யாத கட்சியை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வர பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. திமுகவின் உண்மை முகம் பற்றி, பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என தெரிவித்தார்.