darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



கல்லூரி பேருந்தில் திடீரென பற்றிய தீ : நாமக்கல்லில் பரபரப்பு !

bus
bus

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கே.எஸ்.ஆர் கல்லூரி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலேயே இது முதன்மையான கல்லூரி. இந்த கல்லூரி வளாகத்தில் இன்று காலை பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அதில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அந்த பேருந்து தீப்பற்றி எறிந்துள்ளது. 

bus

எரிந்த பேருந்தின் அருகே நின்று கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அதன் அருகிலிருந்த பேருந்துகள் உடனடியாக அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. பேருந்தின் முழுவதும் பற்றிய தீ, மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவி கரும்புகையுடன் கொழுந்து விட்டு எறிந்துள்ளது. இதனால், கல்லூரியில் வேலை பார்க்கும் பணியாளர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

bus

இது குறித்து கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது அந்த தீப்பொறி பேருந்தின் பெட்ரோல் டேங்கில் பட்டு வெடித்துள்ளது. அதனால் தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்று  தெரியவந்துள்ளது. இதனால், அங்குப் பரபரப்பு நிலவியது.

2018 TopTamilNews. All rights reserved.