• February
    24
    Monday

Main Area

Main



ஒரே மேடையில் துரைமுருகன், கே.எஸ்.அழகிரி! - ஜெயக்குமாரும் விஞ்ஞானிதான் என்று கிண்டல்

ks alagiri
ks alagiri

செல்லூர் ராஜூ போல அமைச்சர் ஜெயக்குமாரும் விஞ்ஞானிதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலாய்த்துள்ளார்.
தி.மு.க, காங்கிரஸ் இடையே உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதை அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ரசித்தன. தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி பேட்டி அளித்ததை வைத்து கூட்டணி முடிந்துவிட்டது என்ற அளவில் எதிர் தரப்பினர் பேசினர். இந்த நிலையில், அறிவாலயத்துக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கே.எஸ்.அழகிரி சந்தித்ததைத் தொடர்ந்து கூட்டணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

jayakumar-and-sellur-raju


இந்த சூழ்நிலையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநாடு வேலூரில் நடந்தது. இந்த மாநாட்டில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒன்றாக பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய துரைமுருகன், "இஸ்லாமியர்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள்தான். நாம் மதத்தால் வேறுபட்டவர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவர்கள் இஸ்லாமியர்களை குறிவைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் இதை எதிர்க்க வேண்டும்" என்றார்.
அழகிரி பேசும்போது, "தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இந்த கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அ..தி.மு.க-வில் அமைச்சர் செல்லூர் ராஜூதான் விஞ்ஞானி என்று பார்த்தால், ஜெயக்குமாரும் விஞ்ஞானியாகத்தான் இருக்கிறார்" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.