‘ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்’ – கே.எஸ்.அழகிரி அறிக்கை!

 

‘ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்’  – கே.எஸ்.அழகிரி அறிக்கை!

தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளின் பிரச்சாரம், சசிகலா விடுதலை, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு என பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் காலூன்ற எண்ணும் காங்கிரஸ், அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றாலும் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றி பெற முனைப்பு காட்டி வரும் காங்கிரஸ், ராகுல் காந்தியை வரவழைத்து 5 மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் நடத்தியது.

‘ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்’  – கே.எஸ்.அழகிரி அறிக்கை!

இந்த நிலையில், ராகுல் காந்தியின் 3 நாட்கள் சுற்றுப் பயணம் வெற்றி அடைந்திருப்பதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு மோடி வரவில்லை. மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை ஏற்க முடியாது. இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், நினைவிடத்தை திறப்பது ஏமாற்று வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் வெற்றி அடைந்ததாகவும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதையே உணர்த்துவதாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.