‘குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

 

‘குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் தேசிய தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணையவிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த குஷ்பு, எனக்கு காங்கிரஸில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்தார். ஆனால் திடீரென டெல்லிக்கு சென்ற குஷ்பு, பாஜக தலைவர்களை சந்தித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

‘குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

இந்த நிலையில் குஷ்பு இன்று மதியம் பாஜகவில் இணையவிருப்பது உறுதியானதால், அவரது தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை பறித்து காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போல, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

‘குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும் குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார் என்றும் கூறினார். மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தது தேவையற்றது என கருத்து தெரிவித்த கே.எஸ்.அழகிரி, குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை என தெரிவித்தார்.