‘மக்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக அரசு எப்படி அனுமதித்தது?’ – கே.எஸ் அழகிரி

 

‘மக்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக அரசு எப்படி அனுமதித்தது?’ – கே.எஸ் அழகிரி

தமிழகத்தில் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதித்தது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும். உருமாறிய கொரோனா பரவிவரும் நிலையில் மக்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக அரசு எப்படி அனுமதித்தது?. 100% இருக்கையுடன் திரையரங்குகள் செயல்படலாம் என அரசு அறிவித்ததன் பின்னணி என்ன?” என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

‘மக்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக அரசு எப்படி அனுமதித்தது?’ – கே.எஸ் அழகிரி

பொங்கல் ரிலீஸுக்கு நடிகர் விஜய், சிம்பு உள்ளிட்ட பலரின் திரைப்படங்கள் காத்திருப்பதால், 100% பார்வையாளர்களை அனுமதிக்க கோரி நடிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்ததாகவும், அதனை பரிசீலித்து தான் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்ததால் தான் இந்த தளர்வு அளிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு முற்றிலுமாக கட்டுக்குள் வராத சூழலில், அரசின் இந்த அறிவிப்பு மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும் நிலையில், கே.எஸ்.அழகிரியும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.