திமுகவுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை: கே.எஸ். அழகிரி

 

திமுகவுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை: கே.எஸ். அழகிரி

திமுகவுடன் நாளை அல்லது நாளைமறுநாள் தொகுதி உடன்பாடு ஏற்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

திமுகவுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை: கே.எஸ். அழகிரி

இன்று நடைபெற்ற திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே. எஸ். அழகிரி, “திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே
பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி. திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். எங்களுக்கிடையே சிக்கல் இல்லை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து பரப்புரை மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும், எங்களுக்கு தேவையான எண்ணிக்கையை கேட்டோம். அதனை திமுகவினர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் எந்த தாமதமும் இல்லை” எனக் கூறினார்.