“பொறுப்பில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி தலைவர் தான்”

 

“பொறுப்பில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி தலைவர் தான்”

பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனது தனியார் நண்பர்களுக்கு அளிக்கும் வகையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சித்தார். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, “இந்தியாவை சிறந்த நாட்டை நேரு உருவாக்கினார். பொருளாதாரத்தை கட்டமைத்தார். எது பொதுத்துறையில் இருக்க வேண்டும், எது தனியார் மயமாக இருக்க வேண்டும் என்பதை நேரு சிறப்பாக செய்தார். பா.ஜ.க அரசு பொதுத்துறையை அழிக்க வேண்டும். தனியாருக்கு மட்டுமே சலுகை அளிக்க நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும். பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனது தனியார் நண்பர்களுக்கு அளிக்கும் வகையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்- ஐ இதுபோல் தான் அழித்தார்கள். எல்.ஐ.சி இதுபோல் அழித்தார்கள். மீண்டும் ராகுல்காந்தி தமிழகம் வர வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவும் வாய்ப்புள்ளது. பொறுப்பில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி எங்களின் தலைவர் தான். அப்படி தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

“பொறுப்பில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி தலைவர் தான்”

புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சில கருப்பு ஆடுகள் புகுந்துள்ளது. புதுச்சேரி அரசை காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. கோவா போன்று செய்ய பா.ஜ.க நினைத்தால் அது தோல்வி அடையும். இது தென் இந்தியா பகுதி. வேளாண் சட்டத்தை திரும்பப்பெற தமிழக அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் பேசுவார்கள். பட்ஜெட் தாக்கல் செய்தாலும் நாட்டின் பொருளாதாரம் சரி செய்யும் வல்லமை பாஜகவினருக்கு இல்லை. சிறந்த வரவு, செலவு பா.ஜ.க வால் கொடுக்க முடியாது. விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் போதாது. விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கான தொகை சேர்த்து வழங்க வேண்டும்” எனக் கூறினார்.