கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி

 

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி

மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாகவும், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்றே எதிர்பார்த்திருந்தார் கமல். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த பின்னரும்கூட, அவரிடம் ஆதரவு கேட்கலாம் என்று கமல் முயற்சித்து வந்தார். அதுவும் நடக்காத நிலையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, “2ஜி பொறுத்த வகையில் 0 இழப்பு என நீதிபதி கபில்சிபில் தெரவித்தார். இது புணையபட்ட குற்றச்சாட்டு. தேர்தலுக்காக நடத்தப்படுகிறது.. காங்கிரசின் சார்பில் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இதில் பொதுவிநியோக திட்ட மேம்பாடு, சிறுகுறு தொழில் வளர்சி, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை. கூட்டணி கட்சி

களாக இருந்தாலும் எங்களுக்குள் கொள்கை வேறுபாடுகள் உள்ளது. ஆனால் மதசார்பற்ற கோட்பாடு எங்களை இணைத்துள்ளது. மாநில அரசின் உரிமைகள் இருந்தாலும் அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தவில்லை. சிறையில் இருந்து யார் வெளியே வந்தாலும் வரவேற்கிறோம்” எனக் கூறினார்.