ரஜினிகாந்த் விஷயத்தில் பாஜக மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது- கே.எஸ். அழகிரி

 

ரஜினிகாந்த் விஷயத்தில் பாஜக மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது- கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் ரஜினிகாந்த் நியமித்திருந்தார். ஆனால் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று ரஜினிகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

ரஜினிகாந்த் விஷயத்தில் பாஜக மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது- கே.எஸ். அழகிரி

இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, “மோடி ஒரு சர்வாதிகாரி, அதனால்தான் விவசாயிகளின் குரலுக்கு மதிப்பளிக்கவில்லை. 2500 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுப்பது மிகப்பெரிய ஊழல். விவசாயிகள் புயல்களால் பாதிக்கப்படும்போது வழங்காத அரசு இப்போது கொடுப்பது மிகப்பெரிய ஊழல். காங்கிரசுக்கு கூட்டணி ஆட்சி மீது நம்பிக்கை கிடையாது , பிஜேபி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தார். செல்வாக்கு இருந்த காலத்திலேயே ஆரம்பிக்காத அவர் இப்போது கட்சி ஆரம்பிக்காமல் வெளியேறிய ரஜினிக்கு பாராட்டுக்கள். ஆன்மிகத்தை விரும்புவார், அரசியலை விரும்பமாட்டார். 30 ஆண்டுகால கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் விஷயத்தில் பாஜக மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது” எனக் கூறினார்.