காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக?… டி.டி.வி.தினகரனுடன் கே.எஸ்.அழகிரி ரகசிய சந்திப்பு… கூட்டணி மாறுகிறதா காங்கிரஸ்?- அதிர்ச்சி பின்னணி

 

காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக?… டி.டி.வி.தினகரனுடன் கே.எஸ்.அழகிரி ரகசிய சந்திப்பு… கூட்டணி மாறுகிறதா காங்கிரஸ்?- அதிர்ச்சி பின்னணி

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரனை புதுச்சேரியில் ரகசியமாக சந்தித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்த சந்திப்பு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு அதாவது, 2021 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. மே மாதம் புதிய ஆட்சியமைய உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இல்லையேல் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து எடுபடாது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் கண்ணாரக் காண்பார்” என்றார். தமிழக பாஜக தலைவர் முருகனோ, தனித்து நின்று அதிமுக வெற்றி பெறாது. தமிழகத்தில் பாஜக பங்கேற்கும் கூட்டணி அரசு ஆட்சியமைக்கும்” என்று தடாலடியாக கூறினார்.

இது ஒரு புறம் இருக்க, திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. அண்மையில் கொரோனா நிவாரணம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக எம்பிக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தயாநிதிமாறன், “எம்.பி.க்களை சந்திக்கிறோம் என்பதை கூட மறந்து டிவி பெட்டியில் சத்தத்தை தலைமைச் செயலாளர் அதிமுக வைத்தார் என்றும் உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை என தலைமைச் செயலாளர் கூறினார் என்றம் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா” என கூறினார்.

காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக?… டி.டி.வி.தினகரனுடன் கே.எஸ்.அழகிரி ரகசிய சந்திப்பு… கூட்டணி மாறுகிறதா காங்கிரஸ்?- அதிர்ச்சி பின்னணி

இந்த கருத்தால் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்” என்று வேதனையுடன் கூறினார். உடனடியாக தயாநிதிமாறன் ட்வீட் போட்டார்.

அதில், தமிழக அரசின் தலைமைச்செயலாளரை சந்தித்தது குறித்து நான் அளித்த பேட்டியின் போது, தலைமை செயலாளர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை” என்று பம்மினார். இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கினார் என்று பகீரமாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து எதிர் அறிக்கை விட்டார் ஸ்டாலின். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு உருவானது. பின்னர் மேலிடம் தலையிட்டதால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு தனிந்தது.

இப்படி முட்டல், மோதல் இடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் இப்போதைய வியூகங்களை வகுத்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாகிகளோடு காணொலி காட்சியிலும், வாட்ஸ் அப் கால்களிலும் ஆலோசனைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, முக்கியமான நிர்வாகிகள், கட்சியின் சீனியர்கள், அபிமானிகள் ஆகியோரிடம் தினம் தினம் பேசி வருகிறார்.

காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக?… டி.டி.வி.தினகரனுடன் கே.எஸ்.அழகிரி ரகசிய சந்திப்பு… கூட்டணி மாறுகிறதா காங்கிரஸ்?- அதிர்ச்சி பின்னணி

கடந்த சில வாரங்களாக திமுகவின் துணையின்றி அதாவது காங்கிரஸ் தன் சொந்தக் காலிலேயே போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. கூட்டணி என்பது ஒருபக்கம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையிலான போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார். ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்று பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸுக்கு டெல்லி காங்கிரஸ் ஒரு முக்கியமான செய்தியை பாஸ் செய்திருப்பதாக சொல்கிறார்கள் தமிழக காங்கிரஸ் சீனியர்கள்.

‘சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் காங்கிரசை வைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது. பாஜக ஆட்சியில் இருந்து திமுகவுக்கு நம்மை வெளியேற்ற வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். முரசொலி அறக்கட்டளை உட்பட பல திமுக தரப்பில் இயங்கும் பல அறக்கட்டளைகள் பற்றிய வரவு செலவு, கணக்கு வழக்கு விவரங்களை மத்திய அரசு ஆராய்ந்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறது. அந்த அறக்கட்டளை விவகாரத்தில் திமுக மீது எந்த நேரத்திலும் மத்திய அரசின் பாய்ச்சல் இருக்கும் என்றும் தகவல்கள் வந்திருக்கின்றன.

காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் இந்த அறக்கட்டளை விவகாரங்களை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் திமுகவோடு டீல் போட்டு வருகிறார்கள். அதனால் நம்மை (காங்கிரசை) திமுக எந்த நேரத்திலும் கழற்றிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் அதிக தொகுதிகள் கேட்கிறோம் என்பதற்காகவோ வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவே திமுக நம்மை கூட்டணியில் இருந்து வெளியேற்ற அழுத்தங்கள் கொடுக்கலாம். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக என்ற ஒற்றைத் திசையை மட்டும் நம்பியிராமல் வேறு திசைகளையும் ஆராய வேண்டும். ஏற்கெனவே காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் தினகரன் விரும்பியதாக கேள்விப்பட்டோம். தினகரனுடனும் டச்சில் இருங்கள்’ என்பதே அந்த செய்தியாம்.

காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக?… டி.டி.வி.தினகரனுடன் கே.எஸ்.அழகிரி ரகசிய சந்திப்பு… கூட்டணி மாறுகிறதா காங்கிரஸ்?- அதிர்ச்சி பின்னணி

இந்த சூழ்நிலையில், கூட்டணிக்கு அச்சாரம்போடும் விதமாக ஊரடங்கு காலத்தில் சிதம்பரத்தில் தங்கியிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி அருகே ஆரோவில் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை இருமுறை சென்று நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சில் தற்போதைய அரசியல் சூழல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். ஒரு வேளை திமுக காங்கிரஸ் கூட்டணி அமையாத பட்சத்தில் காங்கிரஸ் தினகரனுடன் கை கோர்க்கலாம். ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் ஒரு நெருடலோடுதான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் ஆகியோரின் வெளிப்படையான கருத்துகளுக்கு திருமாவளவனால் ஒரு அளவுக்கு மேல் பதில் சொல்ல முடியவில்லை. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி திமுக தனித்தே நிற்கலாம் என்று முடிவெடுத்தால் கம்யூனிஸ்டுகளும் கூட அந்த கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில்தான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு பெரிய கூட்டணி ஒன்றை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார் தினகரன். அக்கூட்டணியில் காங்கிரஸ், திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. அழகிரி- தினகரன் சந்திப்பின் போது இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. தினகரனை நம்பி திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.