திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சியா? – கே.எஸ்.அழகிரி விளக்கம்!

 

திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சியா? – கே.எஸ்.அழகிரி விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக நடத்தி வந்தார். தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், காலில் சிறு அறுவை சிகிச்சை செய்வதற்காக தற்காலிகமாக பிரச்சாரத்தை ஒத்திவைத்துள்ளார். சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் தேர்தல் பணிகளை தொடங்குவேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சியா? – கே.எஸ்.அழகிரி விளக்கம்!

இந்த நிலையில் தான் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கமல்ஹாசனை எங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம். பிரிந்து நின்றால் ஓட்டுகள் சிதறும் என்று கூறியிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசன் இன்னும் அறிவிக்காத சூழலில் கே.எஸ் அழகிரியின் இந்த அழைப்பு, காங்கிரஸ் மூலம் கமல்ஹாசனை திமுக தனது கூட்டணிக்கு அழைக்கிறதா? போன்ற பல கேள்விகளுக்கு வித்திட்டது.

திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சியா? – கே.எஸ்.அழகிரி விளக்கம்!

இது குறித்து தற்போது விளக்கம் அளித்த கே.எஸ்.அழகிரி, ‘திமுக கூட்டணிக்கு கமலை கொண்டு வர முயற்சிக்கவில்லை. ஆனால் அவரை வரவேற்கிறோம். கமல்ஹாசனால் திமுக கூட்டணியின் ஓட்டு வங்கி பாதிக்கப்படாது’ என்று தெரிவித்திருக்கிறார். சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் திரும்பியவுடன், அவர் காங்கிரஸ் அழைப்பை ஏற்று திமுக கூட்டணிக்கு சொல்கிறாரா? என்பது தெரிய வந்துவிடும்.