திமுகவிடம் எத்தனை இடங்களை கேட்பது? – தீவிர ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி!

 

திமுகவிடம் எத்தனை இடங்களை கேட்பது? – தீவிர ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி!

உள்ளாட்சி தேர்தலில் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன் படி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் அதே வேளையில் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளனர்.

திமுகவிடம் எத்தனை இடங்களை கேட்பது? – தீவிர ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி!

திமுகவும் அதிமுகவும் தேர்தல் நடக்கவிருக்கும் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்தலுக்கான வியூகங்களை வகுத்துள்ளனர். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ள காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் எத்தனை இடங்களை கேட்பது என்பது குறித்தும் வாக்கு வங்கி உள்ள இடங்களை அடையாளம் கண்டு அங்கு திமுக வேட்பாளர்களை களம் இறக்குவது குறித்தும் பெண்கள் மற்றும் பட்டியலின வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பற்றியும் அக்கூட்டத்துயில் ஆலோசனை நடத்தப்பட்டது.