புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைப்பு : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைப்பு : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவி வந்தது. கிரண் பேடி, நாராயணசாமிக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரசார் குற்றஞ்சாட்டி வந்தனர். கிரண்பேடியை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாராயணசாமி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைப்பு : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

இதனிடையே, ஆளுங்கட்சி அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா செய்தது புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி அரசின் பெரும்பான்மை குறைந்து, ஆட்சிக்கு நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் தான், ஆளுநர் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவித்தார். அதன் படி, புதுச்சேரி ஆளுநராக தமிழிசை இன்று பொறுப்பேற்றார்.

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைப்பு : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நாராயணசாமி செயல்பட விடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியதை போல தமிழிசை அனுப்பப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் கிரண்பேடி பதவி நீக்கம் செய்ய காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.