‘பிரதமர் மோடியும் அதை செய்திருக்கலாம்’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம் !

 

‘பிரதமர் மோடியும் அதை செய்திருக்கலாம்’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம் !

அமெரிக்க அதிபர் போல பிரதமர் நரேந்திர மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவிட்19 தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோபைடனும் @JoeBiden , இந்தோனிசியாவில் அதிபர் @jokowi யும் முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம்…” என்று குறிப்பிட்டு பிரபல ஊடகங்களை டேக் செய்திருக்கிறார்.

‘பிரதமர் மோடியும் அதை செய்திருக்கலாம்’ – கே.எஸ்.அழகிரி விமர்சனம் !

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில், தடுப்பூசிகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை முடியாமல், பயன்பாட்டுக்கு வந்திருப்பது பல கேள்விகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையில் எதிரொலிக்கிறது.

அதாவது, முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராததற்கு இவையே காரணமாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை கொண்டு வர அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் அதனை ஆமோதித்துள்ளார்.