“ரஜினி மூலம் அதிமுகவை உடைக்க பாஜக சதித்திட்டம்” – கே.எஸ் அழகிரி விமர்சனம்!

 

“ரஜினி மூலம் அதிமுகவை உடைக்க பாஜக சதித்திட்டம்” – கே.எஸ் அழகிரி விமர்சனம்!

ரஜினிகாந்தை மையப்புள்ளியாக வைத்து அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவை உடைக்க ரஜினி என்ற மையப் புள்ளியின் அடிப்படையில் பாஜக சதித்திட்டம் தீட்டியது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளதால் பாஜக சதித்திட்டம் தவிடுபொடியாகியுள்ளது. பாஜக விரித்த வலையில் விழாமல் ரஜினி தன்னை பாதுகாப்போடு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ரஜினியின் துணிச்சலான இந்த முடிவால் தமிழக அரசியலில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் படுதோல்வி அடைந்துள்ளது.

“ரஜினி மூலம் அதிமுகவை உடைக்க பாஜக சதித்திட்டம்” – கே.எஸ் அழகிரி விமர்சனம்!

அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த காரணத்தால் ரஜினியின் மனசாட்சியின் குரல் ஒலிக்கிறது. அதிமுகவை வீழ்த்த மூர்த்திகளின் ஆலோசனையில் அமித்ஷாக்கள் சதித் திட்டம் தீட்டினர். பாஜகவிற்கு உயிர் கொடுக்க முனைந்த குருமூர்த்திகளின் முயற்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ரஜினி என்ற சுவற்றில் சுலபமாக சித்திரம் வரைய முற்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.