திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கே.எஸ் அழகிரி, எம்.பி பாரிவேந்தர் வாழ்த்து!

 

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கே.எஸ் அழகிரி, எம்.பி பாரிவேந்தர் வாழ்த்து!

திமுக தலைவராக 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முக ஸ்டாலினுக்கு கே.எஸ் அழகிரியும் எம்.பி பாரிவேந்தரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கலாமானார். அவரது மறைவுக்கு பிறகு, கருணாநிதியின் மகனான முக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு சகோதரர்கள் இருந்தாலும், கருணாநிதியுடன் இருந்து அரசியல் பற்றிய புரிதலை முழுவதுமாக கற்றதால் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு துக்கம் அனுசரிப்பு முடிந்த உடன், ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கே.எஸ் அழகிரி, எம்.பி பாரிவேந்தர் வாழ்த்து!

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவை வழிநடத்தி வரும் மு.க ஸ்டாலின் இன்று, திமுக தலைவராக 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியும் எம்.பி பாரிவேந்தரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கே.எஸ் அழகிரி, எம்.பி பாரிவேந்தர் வாழ்த்து!

ஸ்டாலினின் கடும் உழைப்புக்கு 2021 பேரவை தேர்தலில் நிச்சயம் உரிய பலனை பெறும் வாய்ப்பு கனிந்து வருகிறது என்றும் முக ஸ்டாலின் மேலும் பல வெற்றிகளை குவிக்க தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதி விட்டுச் சென்ற பணியினை தொய்வன்றி நடத்தி வருபவர் ஸ்டாலின், அவர் விரைவில் தமிழக பொறுப்பை ஏற்க வேண்டும் என எம்.பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.