“நாங்க தாழ்ந்த சாதியா இருக்கிறத தான் மோடி விரும்புறாரா?” – கிருஷ்ணசாமி சராமரி கேள்வி

“நாங்க தாழ்ந்த சாதியா இருக்கிறத தான் மோடி விரும்புறாரா?” – கிருஷ்ணசாமி சராமரி கேள்வி

பிப்ரவரி 13ஆம் தேதி பட்டியலினத்தில் இருக்கும் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரிட்டு அழைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பட்டியலினத்திலிருந்து அந்த உட்பிரிவுகள் வெளியேற்றப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியது. அப்படி செய்யவில்லை என்றால் தங்கள் சமுதாய வாக்குகளை பாஜக பெற முடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

“நாங்க தாழ்ந்த சாதியா இருக்கிறத தான் மோடி விரும்புறாரா?” – கிருஷ்ணசாமி சராமரி கேள்வி

இதுதொடர்பாகப் பேசிய அவர், ” தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் மட்டுமல்ல பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையின் உள்ளார்ந்த அம்சம். இந்து பாரம்பரியமிக்கவர்கள் எனக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு கூட எங்களது பட்டியல் மாற்றத்துக்கு முன்வரவில்லை. மத்திய அரசு இந்தக் கேலிக்கூத்தை ஏன் செய்கிறது. இதைப் பரிசீலிக்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை நிராகரிப்போம். பட்டியலிலிருந்து வெளியேறும் வரை நாங்கள் போராடுவோம். நாங்கள் தாழ்ந்த சாதியாக இருக்கவே மத்திய அரசு விரும்புகிறதா?

“நாங்க தாழ்ந்த சாதியா இருக்கிறத தான் மோடி விரும்புறாரா?” – கிருஷ்ணசாமி சராமரி கேள்வி

நாங்கள் இட ஒதுக்கீட்டுக்காக விலக கேட்கவில்ல. சுய மரியாதைக்காக வெளியேற்றுங்கள். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலில் எங்களது நிலைப்பாடு எதிரொலிக்கும். பிப்.25ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். பட்டியலில் மாற்றம் செய்யாமல் எங்கள் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. அரசியல் ரீதியாக பாஜக எங்களது வாக்குகளை அறுவடை செய்ய நினைத்தால் பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்றார்.