அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போகவேண்டும்? -கிருஷ்ணசாமி

 

அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போகவேண்டும்? -கிருஷ்ணசாமி

ஆட்சி என்றால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போக வேண்டும்? இதற்கு மாற்றாக அனைவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும் என்ற சிந்தனையை விரும்புகிறேன். ஆனால் தமிழகத்திற்கு விடிவுகாலத்தை உருவாக்கித் தர முடியுமா?, மாற்று சிந்தனையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முடியுமா? மாற்றம் என்ற விடியலை நோக்கி இவர்கள் பயணிப்பார்களா எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதிமுக, திமுக பின்னால் ஏன் எல்லோரும் போகவேண்டும்? -கிருஷ்ணசாமி

தேவந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர் மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. புதிய தமிழகம் கோரிக்கை பெயர் மாற்றம் மட்டுமல்ல, பட்டியல் பிரிவில் வெளியேற்ற வேண்டும். புதிய தமிழகம் கோரிக்கை பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றப்படவில்லையெனில் பாஜகவின் கூட்டணிக்கு தேவந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது” என தெரிவித்தார்.