தேர்தலை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்!

 

தேர்தலை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகித்தது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் ஜோடி சேராமல் 60 தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களையும் புதிய தமிழகம் கட்சி நிறுத்தி தேர்தலை சந்தித்தது.தேர்தலில் ஓட்டபிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.

தேர்தலை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்!

தமிழகம் முழுவதும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு வாக்குக்கு 1000, 500 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிருப்பதாகவும், வாக்குரிமை சுதந்திரம் படுகொலை செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்றும் கிருஷ்ணசாமி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஏப்ரல் 22 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.