தமிழக ஆளுநரை மாற்ற திட்டம்! அடுத்த ஆளுநர் இவரே…

 

தமிழக ஆளுநரை மாற்ற திட்டம்! அடுத்த ஆளுநர் இவரே…

தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை என ஆளும் அதிமுகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன.

குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டு ஒப்புதலுக்கு தாமதம், 7 பேர் விடுதலை தாமதம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு என பல விஷயங்களில் பன்வாரிலால் புரோகித் மீது அரசியல் கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழக ஆளுநரை மாற்ற திட்டம்! அடுத்த ஆளுநர் இவரே…

இந்நிலையில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு தமிழக ஆளுநரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பன்வாரிலால் புரோகித்துக்கு பதில் புதிய ஆளுநராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணம் ராஜூ ஓர் திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர். இவர் நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்றவர். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ரீபல் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதுவரை 183 படங்களில் நடித்துள்ளார்.1990 ஆம் ஆண்டுமுதல் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். பாஜகவை சேர்ந்த இவர், கோதாவரி மாவட்டம் நரசாபூரிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.