கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நோயாளி கீழே தள்ளிவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சைக்காக சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து வரப்பட்டார். உடல்நிலை முடியாத அவரை கைதாங்கலாகப் படுக்கையில் படுக்க வைக்க ஆள்

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

இல்லை. இதனால் தாமாக அவர் எழுந்து படுக்கைக்கு செல்ல வேண்டும் என்று ஊழியர் ஆபாசமாக திட்டியுள்ளார். அவரால் முடியாத நிலையில் அந்த ஊழியர் வீல் சேரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு சென்றார். மற்றொருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!
அரசு ஊழியரின் மனிதாபிமானம் இல்லாத இந்த செயலுக்கு கண்டனம் எழுந்தது. கீழே தள்ளிய பாஸ்கர் என்ற ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நோயாளியை தள்ளிவிட்ட விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்!
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப நாட்களாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.