சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கே.பி.ராமலிங்கம் அதிமுகவில் இணைகிறாரா?

திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். முன்னாள் எம்பியான இவர், அண்மையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கே.பி.ராமலிங்கம் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், “கருணாநிதியை போல் கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின். திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. என்னை போல் பாதிக்கப்பட்டவர் நிறைய பேர் திமுகவில் உள்ளனர். விவசாயிகளுக்காக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதற்காக விவசாய சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் சந்தித்து நன்றி தெரவித்தேன்” எனக் கூறினார்.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...