“சசிகலா அதிமுக உறுப்பினர் அல்ல; அதனால கொடிய பயன்படுத்தக்கூடாது” – கே.பி.முனுசாமி

 

“சசிகலா அதிமுக உறுப்பினர் அல்ல; அதனால கொடிய பயன்படுத்தக்கூடாது” – கே.பி.முனுசாமி

பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா கடந்த 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்து சென்றபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணித்தார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கவிட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக கொடியை பயன்படுத்தியற்காக சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அறிவித்தது. இதனிடையே தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர்.

“சசிகலா அதிமுக உறுப்பினர் அல்ல; அதனால கொடிய பயன்படுத்தக்கூடாது” – கே.பி.முனுசாமி

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, “அதிமுஅக் நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. உறுப்பினராக இருந்தாலும், 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது அதிமுக சட்ட விதி. சட்ட விதிகளின் படி, உறுப்பினர் அட்டையை சசிகலா புதுப்பிக்கவில்லை. எனவே சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை” எனக் கூறினார்.