Home அரசியல் டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை- கேபி முனுசாமி அதிரடி

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை- கேபி முனுசாமி அதிரடி

அதிமுகவில் இணைக்ககோரி தினகரன் மன்னிப்பு கடிதம் அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை- கேபி முனுசாமி அதிரடி

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, “கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு சட்டத்திட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஓருவாக்கி செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை- கேபி முனுசாமி அதிரடி

டிடிவி தினகரன் பல்வேறு கோணங்களில் இந்த கட்சியை கைபற்ற முயற்சி செய்து பார்த்தார். தர்மமும் நியாயமும் உண்மையானர்கள் பக்கம் உள்ளது. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைப்பற்றுவோம் என சொன்னால் கேலிக்குறியது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும். டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி அமமுக. அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால் டிடிவி தினகரன் அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால் அதற்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்” எனக் கூறினார்.

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை- கேபி முனுசாமி அதிரடி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...
- Advertisment -
TopTamilNews