ஸ்டாலின் பதிலளிக்காமல் குற்றஞ்சாட்டுவதா? – கே.பி.முனுசாமி எதிர்ப்பு!

 

ஸ்டாலின் பதிலளிக்காமல் குற்றஞ்சாட்டுவதா? – கே.பி.முனுசாமி எதிர்ப்பு!

திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்திலிருந்து பெண் வெளியேற்றப்பட்டதற்கு கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், ‘எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ; வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா? தங்கமணி, வேலுமணி எல்லா மணியும்; எல்லாமே money moneyன்னு இருக்கு..இப்படி பல அமைச்சர்கள் குறித்து ஊழல் புகாரை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்’ என்று அதிமுக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் பதிலளிக்காமல் குற்றஞ்சாட்டுவதா? – கே.பி.முனுசாமி எதிர்ப்பு!

அப்போது கேள்வி கேட்க அனுமதி இல்லாத பெண் ஒருவர் மைக்கை வாங்கி ஸ்டாலினிடம் திடீரென கேள்வி கேட்டுள்ளார். என் கிட்ட கொடுத்த பட்டியல்ல உங்க பெயர் இல்லை? நீங்கள் எந்த ஊர் என்று கேட்க? ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது எதிர்கேள்வி கேட்க? அங்கு சலசலப்பு ஏற்பட்டது . இதையடுத்து அந்த பெண்ணை கூட்டத்திலிருந்து திமுகவினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

ஸ்டாலின் பதிலளிக்காமல் குற்றஞ்சாட்டுவதா? – கே.பி.முனுசாமி எதிர்ப்பு!

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூரில் திமுக கூட்டத்தில் பெண் வெளியேற்றப்பட்டதற்கு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துகளை கேட்காமல், அதிமுகவை ஸ்டாலின் குற்றம் சாட்டுவதா? எனவும் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் மக்கள் சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை திமுகவினர் தாக்கியதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.