பி.இ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி. அன்பழகன்

 

பி.இ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி. அன்பழகன்

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆரம்பமாகி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட சில தாமதங்களால் நாளை தரவரிசைப் பட்டியலை வெளியிடமுடியவில்லை என தமிழக அரசு தெரிவித்தது.

பி.இ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி. அன்பழகன்

இந்நிலையில் பி.இ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.