புரெவி புயலால் தமிழகத்தில் 2 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின- அமைச்சர் கே.பி. அன்பழகன்

 

புரெவி புயலால் தமிழகத்தில் 2 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின- அமைச்சர் கே.பி. அன்பழகன்

புரெவி புயலால் தமிழகத்தில் 2 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன. குறிப்பாக திருவாரூர், கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது, “தமிழகம் முழுவதும் புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக 2 லட்சம் ஹெக்டேர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

புரெவி புயலால் தமிழகத்தில் 2 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின- அமைச்சர் கே.பி. அன்பழகன்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,10,344 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேளாண் துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை கொண்டு தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.புயல் நிவாரணத்தை மத்திய அரசிடம் இருந்து தமிழக முதல்வர் போராடிப் பெற்றுத் தருவார். திமுக தலைவர் ஸ்டாலின் இது பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறினார்.