முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

 

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

முதுநிலை வகுப்பு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் இதர கல்லூரி வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். செய்முறை தேர்வை, சாதாரண தேர்வு போல ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது. புயல், கனமழை போன்ற பேரிடர்கள் வந்தால் கல்லூரிகளை வேறு தேதியில் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” எனக் கூறினார்.