கோழிக்கோடு விமான விபத்து… விசாரணை அறிக்கை வழங்க 5 மாத அவகாசம்!

கோழிக்கோடு விமான விபத்து… விசாரணை அறிக்கை வழங்க 5 மாத அவகாசம்!

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களில் விசாரணை அறிக்கை வழங்கப்பட வேண்டும் என்று அந்த குழுவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கோழிக்கோடு விமான விபத்து… விசாரணை அறிக்கை வழங்க 5 மாத அவகாசம்!
துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு ஓடுதளத்தில் தேங்கியிருந்த தண்ணீர்தான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. அதன்பிறகு கருப்பு பெட்டி பதிவுகளை ஆய்வு செய்ததில் விமான சுயமாக முடிவெடுத்து தவறான ஓடு பாதையில் இறங்கியதும், தரையிறக்குவது தொடர்பாக அவருக்கு இருந்த அதீத

கோழிக்கோடு விமான விபத்து… விசாரணை அறிக்கை வழங்க 5 மாத அவகாசம்!

நம்பிக்கையுமே காரணம் என்று தெரியவந்தது என செய்தி வெளியானது.
இந்த நிலையில் இந்த விமான விபத்து பற்றி விசாரணை நடத்த கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும், பெரிய விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கவும் தடை விதித்துள்ளது.

கோழிக்கோடு விமான விபத்து… விசாரணை அறிக்கை வழங்க 5 மாத அவகாசம்!
கேப்டன் சாஹர் தலைமையிலான குழுவில் நான்கு நிபுணர்கள் இடம் பெறுவார்கள் என்றும், இவர்கள் ஐந்து மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.