கேரளாவில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு !

கேரளாவில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு !

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக 120 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு !

இதில் விமான விபத்தில் இறந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீட்பு பணியில் ஈடுப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் உறவினர்களிடம் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் 2ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு !
இந்நிலையில் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாக உடைந்துபோன விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியின் (டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் ) மூலம் விபத்து ஏற்பட்டதன் காரணம் அறியவர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த cvr கருவியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.