சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாரத்திற்கு ஒரு நாள் இயங்காது!

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாரத்திற்கு ஒரு நாள் இயங்காது!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டாலும், கோயம்பேட்டை போல வியாபாரம் நடக்கவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்து வந்தனர். இருப்பினும், சென்னையில் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்த கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாரத்திற்கு ஒரு நாள் இயங்காது!

இதை தொடர்ந்து கடந்த செப். மாத இறுதியில் அரசு அனுமதியுடன் மார்க்கெட் திறக்கப்பட்டது. குறைந்த அளவிலானா கடைகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சில வியாபாரிகளுக்கு கொரோனா உறுதியானதால் மார்க்கெட் மூடப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. ஆனால், அந்த வியாபாரிகளை மட்டும் தனிமைப்படுத்திய சென்னை மாநகராட்சி மார்க்கெட் தொடர்ந்து இயங்கும் என அறிவித்தது. இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வணிகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாரத்திற்கு ஒரு நாள் இயங்காது!

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.