மீண்டும் திறக்கப்படுகிறதா கோயம்பேடு சந்தை?.. மூன்றடுக்கு இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

மீண்டும் திறக்கப்படுகிறதா கோயம்பேடு சந்தை?.. மூன்றடுக்கு இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் திறக்கப்படுகிறதா கோயம்பேடு சந்தை?.. மூன்றடுக்கு இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

இந்நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க ஆயத்த பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் மூன்றடுக்கு உயர் ரக கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் மூலம் மார்க்கெட் முழுவதும் தெளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மார்க்கெட் முழுவதிலும் இருந்த குப்பைகளை அகற்றி பாதுகாப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், 10 நாட்கள் சுத்தப்படுத்தியதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு சந்தை மீண்டும் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகிறது.