கோயம்பேடு மேம்பாலம் டிசம்பர் மாதம் திறப்பு – முதல்வர் பழனிசாமி

 

கோயம்பேடு மேம்பாலம் டிசம்பர் மாதம் திறப்பு – முதல்வர் பழனிசாமி

கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை வரும் டிசம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்காவுக்கு அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடி முதலீட்டில் கட்டப்பட்டிருக்கும் உயர்நிலை மேம்பாலத்தை இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர், அந்த மேம்பாலத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கோயம்பேடு மேம்பாலம் டிசம்பர் மாதம் திறப்பு – முதல்வர் பழனிசாமி

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, வண்டலூர் மேம்பாலத்தின் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் கோயம்பேடு மேம்பாலத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தால் வரும் டிசம்பரில் அதனை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பெருங்களத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை உள்ளிட்ட சந்திப்புக்களை இணைக்கும் பல்லாவரம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது.