இனி இந்த நாட்களில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும்?

 

இனி இந்த நாட்களில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும்?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது பிரச்சினையை ஏற்படுத்தியது.

இனி இந்த நாட்களில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும்?

இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறி கோயம்பேடு சில்லரை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாக அலுவலகத்தை (சி.எம்.டி.ஏ.) முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பின்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுழற்சி முறையில் 50% கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்தது.

இனி இந்த நாட்களில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும்?

தற்போது ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்படும். ஏற்கெனவே மாதத்தின் 2 மற்றும் 4ஆம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.